ரவா கிச்சடி செய்முறை, Rava kichadi

ரவா கிச்சடி செய்முறை:

ரவா கிச்சடி, ரவா உப்மாவை விட சற்று வித்தியாசமானது. பொதுவாக ரவா உப்புமா, காய்கறிகள் சேர்க்காமல் உதிரியாக செய்வார்கள். கிச்சடியில், மஞ்சள் தூள், காய் கறிகள், தக்காளி சேர்த்து, சற்று தளர இருக்குமாறு தண்ணீர் அதிகமாக ஊற்றி வேக  விடவேண்டும். மேலும் கிச்சடிக்கு நெய் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

ரவா கிச்சடி செய்முறை:நெய்யும் எண்ணெய்யும் சேர்த்து, கலந்து தாராளமாக உபயோகித்தால் தான் கிச்சடி ஒட்டாமல் நன்கு வரும். இல்லை என்றால் பசை போல ஆகிவிடும். உருளை கிழங்கு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து செய்து பாருங்கள், அதன் வாசனையே தனி! சூடாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும்.

ஒன்றுக்கு ஐந்து தண்ணீர் சேர்த்தால் நன்கு தளர வரும். அனால் அதிகமாக எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவேண்டும். ஒன்றுக்கு நான்கு தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.

காலை உணவு

தேவையான பொருட்கள்:

1 கப் = 240 மில்லி

ரவா – 1 கப்

வெங்காயம் – 1

கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிச்சங்கு போன்ற காய்கறிகள் – 1 & 1/2 கப்

தக்காளி – 1

கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கியது – 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் + நெய் – 3 மேஜைக்கரண்டி

தாளிக்க 

எண்ணெய் + நெய் – 2 மேஜைக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி

கடலை பருப்பு – 1 மேஜைக்கரண்டி

கருவேப்பிலை – 1 ஆர்க்கு

ரவா கிச்சடி செய்முறை:

  1. உளுத்தம் பருப்புரையும் கடலை பருப்பையும் 1 மணிநேரம் ஊறவைத்துக்கொண்டாள், நன்கு மிருதுவாக இருக்கும். தண்ணீரை முதலில் ஒரு அடுப்பில் கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய்+ நெய் சூடு செய்து, தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்க்கவும். ஊறவைத்த பருப்புகளை, தண்ணீரை நன்கு வடித்து சேர்க்கவும். கடைசியாக கருவேப்பில்லை சேர்க்கவும். நீள  வாக்கில் வெட்டிய  வெங்காயம், பொடியாக நறுக்கிய காய்கறிகள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.Rava kichadi recipe step 1
  3. அதற்கு மட்டும் தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை, ரவை சேர்த்து மேலும்  2 நிமிடம் வதக்கவும். Rava kichadi recipe step 2 மேலும் 1 மேஜைக்கரண்டி நெய்+ எண்ணெய் சேர்க்கவும்.
  4. கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கிளறவும்.Rava kichadi recipe step 3
  5. நன்கு தண்ணீர் வற்றி, கூழ் போல ஆகும் வரை கொதிக்க வைக்கவும். மிதமான தீயில் 8- 10 நிமிடங்கள் மூடி வேக  வைக்கவும். நடுவில் நெய்+ எண்ணெய் சேர்த்து ஒரு முறை கிளறவும். கிச்சடி வெந்தவுடன் ஒட்டாமல் அல்வா அல்லது கேசரி போல வரவேண்டும். இல்லை என்றால் மேலும் எண்ணெய் சேர்த்து கிளறவும்.Rava kichadi recipe step 4
சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
rava-kichadi-recipe
ரவா கிச்சடி செய்முறை
Prep Time
15 mins
Cook Time
30 mins
Total Time
45 mins
 
ரவா கிச்சடி, ரவா உப்மாவை விட சற்று வித்தியாசமானது. பொதுவாக ரவா உப்புமா, காய்கறிகள் சேர்க்காமல் உதிரியாக செய்வார்கள். கிச்சடியில், மஞ்சள் தூள், காய் கறிகள், தக்காளி சேர்த்து, சற்று தளர இருக்குமாறு தண்ணீர் அதிகமாக ஊற்றி வேக விடவேண்டும். மேலும் கிச்சடிக்கு நெய் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
Course: Breakfast
Cuisine: Indian
Servings: 5
Author: rakskitchentamil
Ingredients
  • ரவா - 1 கப்
  • வெங்காயம் - 1
  • கேரட் பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிச்சங்கு போன்ற காய்கறிகள் - 1 & 1/2 கப்
  • தக்காளி - 1
  • கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது - 1/4 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் + நெய் - 3 மேஜைக்கரண்டி
  • எண்ணெய் + நெய் - 2 மேஜைக்கரண்டி
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
  • கடலை பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  • கருவேப்பிலை - 1 ஆர்க்கு
Instructions
  1. உளுத்தம் பருப்புரையும் கடலை பருப்பையும் 1 மணிநேரம் ஊறவைத்துக்கொண்டாள், நன்கு மிருதுவாக இருக்கும்.
  2. தண்ணீரை முதலில் ஒரு அடுப்பில் கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய்+ நெய் சூடு செய்து, தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்க்கவும்.
  4. ஊறவைத்த பருப்புகளை, தண்ணீரை நன்கு வடித்து சேர்க்கவும். கடைசியாக கருவேப்பில்லை சேர்க்கவும்.
  5. நீள வாக்கில் வெட்டிய வெங்காயம், பொடியாக நறுக்கிய காய்கறிகள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
  6. அதற்கு மட்டும் தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  7. மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை, ரவை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். மேலும் 1 மேஜைக்கரண்டி நெய்+ எண்ணெய் சேர்க்கவும்.
  8. கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கிளறவும்.
  9. நன்கு தண்ணீர் வற்றி, கூழ் போல ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
  10. மிதமான தீயில் 8- 10 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். நடுவில் நெய்+ எண்ணெய் சேர்த்து ஒரு முறை கிளறவும்.
  11. கிச்சடி வெந்தவுடன் ஒட்டாமல் அல்வா அல்லது கேசரி போல வரவேண்டும். இல்லை என்றால் மேலும் எண்ணெய் சேர்த்து கிளறவும்.
Recipe Notes

வெங்காயத்துடன் இஞ்சி சேர்த்து வதக்கினால் நன்கு வாசனையாகவும், செரிமானத்திற்கும் உதவும்.

Author: Raks Anand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating