
ரசம் வடை அல்லது ரச வடை செய்முறை. ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடனும், வீடியோவுடனும். இதில் பருப்பு வடை சேர்த்து செய்யும் ரச வடை செய்முறையை பார்க்கலாம்.
பொதுவாக ரசம் வடை, மெதுவடை (உளுந்து வடை) வைத்து செய்வது வழக்கம். அதுவும் வடை மிஞ்சி விட்டால் ரசத்தில் ஊறவைத்து சாப்பிடுவோம். ஆனால் பருப்புவடை வைத்து ரசம் வடை செய்வது இதுவே முதல் முறை.
ஒரு எளிமையான ரசம் செய்முறையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ரசப்பொடி அரைத்து சேர்த்துள்ளேன். ஆனால் நீங்கள் கடைகளில் வாங்கும் ரசப்பொடி சேர்த்தும் செய்யலாம்.
ரசம் வடை செய்ய தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – 3/4 கப்
வெங்காயம் – 1
சிவப்பு மிளகாய் – 3
சீரகம் – 3/4 தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி இலை – 3 மேஜைக்கரண்டி
பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
ரசம் செய்ய தேவையான பொருட்கள்
புளி – 1 தேக்கரண்டி
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி இலை, வெட்டப்பட்டது – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
ரசம் தூள்
சிவப்பு மிளகாய் – 3
கொத்தமல்லி / தனியா – 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 1
கறிவேப்பிலை – சில
செய்முறை:
- முதலில் கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைக்கலாம். மிக்சியில், சிகப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு மற்றும் சீரகத்தை பொடித்துக்கொள்ளவும்.
- கடலைப்பருப்பிலிருந்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, மிக்சியில் சேர்க்கவும். தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் , கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் அரைத்த பருப்புக்கலவையையும் சேர்த்து கலக்கவும்.
- சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.கடாயில் எண்ணெயயை காயவைத்து, உருட்டிய உருண்டைகளை, லேசாக தட்டி எண்ணெய்யில் 3-4 வரை போடவும்.
- மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.கிட்சன் டிஷ்யூவில் எடுத்து வைக்கவும்.
- ரசத்திற்கு தேவையான புளியை வெந்நீரில் ஊறவைக்கவும்.ஒரு கப் தண்ணீரில் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும். மிளகாய், மிளகு, சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில், புளி கரைசலை, 3 கப் தண்ணீர், மஞ்சள், உப்பு, தக்காளி, பெருங்காயம், ரசப்பொடி மற்றும் சில கருவேப்பிலை சேர்த்து, கலந்துகொள்ளவும்.
- அடுப்பில் வைத்து, ரசம் கொதிவந்தவுடன், வடைடைகளை சேர்த்து, உடனடியாக அடுப்பை அணைத்து, மூடி வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சூடுசெய்து, கடுகு, சிவப்பு மிளகாய், சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். கொத்தமல்லி இலை சேர்க்கவும். 15 நிமிடங்கள் குறைந்தபட்சம் ஊறியபின் பரிமாறவும்.

- கடலை பருப்பு - 3/4 கப்
- வெங்காயம் - 1
- சிவப்பு மிளகாய் - 3
- சீரகம் - 3/4 தேக்கரண்டி
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- கொத்தமல்லி இலை - 3 மேஜைக்கரண்டி
- பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- ரசம் செய்ய தேவையான பொருட்கள்
- புளி - 1 தேக்கரண்டி
- தக்காளி - 1
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
- பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி இலை வெட்டப்பட்டது - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- சிவப்பு மிளகாய் - 3
- கொத்தமல்லி / தனியா - 1 டீஸ்பூன்
- கருப்பு மிளகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 1
- கறிவேப்பிலை - சில
- முதலில் கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைக்கலாம்.
- மிக்சியில், சிகப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு மற்றும் சீரகத்தை பொடித்துக்கொள்ளவும்.
- கடலைப்பருப்பிலிருந்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, மிக்சியில் சேர்க்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் , கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் அரைத்த பருப்புக்கலவையையும் சேர்த்து கலக்கவும்.
- சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- கடாயில் எண்ணெயயை காயவைத்து, உருட்டிய உருண்டைகளை, லேசாக தட்டி எண்ணெய்யில் 3-4 வரை போடவும்.
- மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
- கிட்சன் டிஷ்யூவில் எடுத்து வைக்கவும்.
- ரசத்திற்கு தேவையான புளியை வெந்நீரில் ஊறவைக்கவும்.
- ஒரு கப் தண்ணீரில் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
- மிளகாய், மிளகு, சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில், புளி கரைசலை, 3 கப் தண்ணீர், மஞ்சள், உப்பு, தக்காளி, பெருங்காயம், ரசப்பொடி மற்றும் சில கருவேப்பிலை சேர்த்து, கலந்துகொள்ளவும்.
- அடுப்பில் வைத்து, ரசம் கொதிவந்தவுடன், வடைடைகளை சேர்த்து, உடனடியாக அடுப்பை அணைத்து, மூடி வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சூடுசெய்து, கடுகு, சிவப்பு மிளகாய், சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கொத்தமல்லி இலை சேர்க்கவும். 15 நிமிடங்கள் குறைந்தபட்சம் ஊறியபின் பரிமாறவும்.
வடை வேக வைக்கும் பொழுது, தீயை மிதமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.
ரசம் அல்லது வடை, இரண்டில் ஒன்று சூடாக இருக்க வேண்டும். இரண்டுமே சூடாக இருந்தால் வடை கரைந்துவிடும்.