மோர் குழம்பு எளிதில் செய்துவிடக்கூடிய குழம்பு வகைகளுள் ஒன்று. பொதுவாக பருப்பு உசிலி அல்லது உருளைக்கிழங்கு கறியுடன் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
புளித்த தயிர் – 1 & 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பூசணிக்காய் – 3/4 கப்
உப்பு – தேவையான அளவு
அரைக்கவும்
தேங்காய் – 1/4 கப்
தனியா – 2 தேக்கரண்டி
இஞ்சி – 1 அங்குலத் துண்டு
சீரகம் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
அரிசி மாவு – 1/2 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 1
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு ஆர்க்கு
மோர் குழம்பு செய்முறை
- முதலில் தயிரை நன்கு கடைந்து கொள்ளவும். இல்லாவிடில் குழம்பு திரிந்துவிடும்.
- அரைக்கத் தேவையான பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து, அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்த விழுதை கடைந்த தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- பூசணிக்காயை, தனியாக, கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, வேக வைத்து, அதனையும் தயிருடன் சேர்க்கவும்.
- அடுப்பில் வைத்து சூடு செய்யவும். சுற்றிலும் பொங்கி கொதித்து வரும் பொழுது, அடுப்பை அனைத்துவிடவேண்டும். கொதிக்கக்கூடாது. கரண்டி கொண்டு கலக்கலாம், ஆனால், தூக்கி ஊற்றக்கூடாது.
- கடாயில் எண்ணெய் ஊற்றி,தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து, தாளித்து, குழம்பில் சேர்க்கவும். குழம்பை முற்றிலும் மூடி இட்டு மூடக்கூடாது. சற்று திறந்தாற்போல் வேண்டுமென்றால் மூடலாம்.
குறிப்பு
- குழம்பு கொதிக்கக்கூடாது. கரண்டி கொண்டு கலக்கலாம், ஆனால், தூக்கி ஊற்றக்கூடாது.
- குழம்பை முற்றிலும் மூடி இட்டு மூடக்கூடாது. சற்று திறந்தாற்போல் வேண்டுமென்றால் மூடலாம்.

மோர் குழம்பு செய்முறை
Prep Time
2 hrs
Cook Time
15 mins
Total Time
2 hrs 15 mins
மோர் குழம்பு எளிதில் செய்துவிடக்கூடிய குழம்பு வகைகளுள் ஒன்று. பொதுவாக பருப்பு உசிலி அல்லது உருளைக்கிழங்கு கறியுடன் நன்றாக இருக்கும்.
Course: Main
Cuisine: Indian
Servings: 4
Ingredients
- புளித்த தயிர் - 1 & 1/2 கப்
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- பூசணிக்காய் - 3/4 கப்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் - 1/4 கப்
- தனியா - 2 தேக்கரண்டி
- இஞ்சி - 1 அங்குலத் துண்டு
- சீரகம் - 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 4
- அரிசி மாவு - 1/2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 1
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
Instructions
- முதலில் தயிரை நன்கு கடைந்து கொள்ளவும். இல்லாவிடில் குழம்பு திரிந்துவிடும்.
- அரைக்கத் தேவையான பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து, அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்த விழுதை கடைந்த தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- பூசணிக்காயை, தனியாக, கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, வேக வைத்து, அதனையும் தயிருடன் சேர்க்கவும்.
- அடுப்பில் வைத்து சூடு செய்யவும். சுற்றிலும் பொங்கி கொதித்து வரும் பொழுது, அடுப்பை அனைத்துவிடவேண்டும். கொதிக்கக்கூடாது. கரண்டி கொண்டு கலக்கலாம், ஆனால், தூக்கி ஊற்றக்கூடாது.
- கடாயில் எண்ணெய் ஊற்றி,தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து, தாளித்து, குழம்பில் சேர்க்கவும். குழம்பை முற்றிலும் மூடி இட்டு மூடக்கூடாது. சற்று திறந்தாற்போல் வேண்டுமென்றால் மூடலாம்.
Recipe Notes
குழம்பு கொதிக்கக்கூடாது. கரண்டி கொண்டு கலக்கலாம், ஆனால், தூக்கி ஊற்றக்கூடாது.
குழம்பை முற்றிலும் மூடி இட்டு மூடக்கூடாது. சற்று திறந்தாற்போல் வேண்டுமென்றால் மூடலாம்.