முறுக்கு குழம்பு செய்முறை, ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன். புளி குழம்பு செய்முறையை போலவே தான், ஆனால் இதில் முறுக்கு சேர்த்து செய்கிறோம்.
முறுக்கு மீந்து விட்டாலோ, நமுத்து போய் விட்டாலோ, அதனை, இப்படி குழம்பாக செய்யலாமே. அப்பள குழம்பு போலவே இதுவும் மிகவும் நன்றாக இருந்தது. செய்துபாருங்கள்.
தேவையான பொருட்கள்:
உடைத்த முறுக்கு – 2 கப்
புளி – 1 மேஜைக்கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1
சாம்பார் பொடி – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
வெல்லம் – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
ஜீரகம் – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
செய்முறை :
- புளியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, புளிக்கரைசல் தயாரித்துக்கொள்ளவும் (3 கப் இருக்கும்படியாக தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்).
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து, வெடித்ததும் வெந்தயம், ஜீரகம், கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் முறையே சேர்த்துக்கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். நான், சிறிய வெங்காயம் சேர்த்தேன் (1/2 கப், நறுக்கியது). பொடியாக வெட்டியா தக்காளி சேர்க்கவும்.
- புளிக்கரைசலில் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- நன்கு ஒரு நிமிடம் தக்காளி வதங்கியதும், புளிக்கரைசலில் சேர்க்கவும்.
- முறுக்கை ஒன்றிரண்டாக உடைத்து 2 கப் சேர்த்துக்கொள்ளவும்.
- கொதிக்கும் குழம்பில் சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் சுண்ட வைக்கவும்.
- பிறகு, வெல்லம் , மிளகுத்தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
சாதத்துடன், கூட்டு அல்லது பொரியலுடன் பரிமாறவும். வாழைக்காய் பொடிமாஸ்

முறுக்கு குழம்பு
Prep Time
10 mins
Cook Time
15 mins
Total Time
25 mins
முறுக்கு குழம்பு செய்முறை, ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன். புளி குழம்பு செய்முறையை போலவே தான், ஆனால் இதில் முறுக்கு சேர்த்து செய்கிறோம்.
Course: Main
Cuisine: Indian
Keyword: குழம்பு, முறுக்கு
Servings: 3
Ingredients
- 2 கப் முறுக்கு உடைத்தது
- 1 மேஜைக்கரண்டி புளி
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 1 மேஜைக்கரண்டி சாம்பார் பொடி
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/2 தேக்கரண்டி வெல்லம்
- 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
- உப்பு - தேவையான அளவு
- 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/4 தேக்கரண்டி வெந்தயம்
- 1 தேக்கரண்டி ஜீரகம்
- 1 ஆர்க்கு கருவேப்பிலை
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
Instructions