மிளகு சீரக இடியப்பம் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இடியாப்ப வகைகளுள் ஒன்று. அரிசியுடன் மிளகு ஜீரகம் மற்றும் தேங்காய் சேர்த்தால் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு / இடியப்ப மாவு – 3/4 கப்
மிளகு – 2 மேஜைக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/4 கப்
நெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
முந்திரிப் பருப்பு – 8
கருவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – 2 சிட்டிகை
மிளகு சீரக இடியப்பம் செய்முறை
- தண்ணீரில் சில சொட்டுகள் நல்லெண்ணெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அரிசி மாவில் சேர்த்து, மாவாக பிசைந்து கொள்ளவும்.
- இடியப்பம் செய்து ஆரியவுடன் உதிர்த்து வைத்துக்கொள்ளவும். மிளகு சீரகத்தை கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து, உடைத்த முந்திரிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- மிளகு சீரகத்தூள், கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- இதனை, வேகவைத்து உதிர்த்த இடியப்பம், துருவிய தேங்காய் , உப்பு (தேவைபட்டால்) சேர்த்து, கலந்து வைக்கவும்.
குறிப்பு
- தேங்காயை வறுத்து சேர்த்தல் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

மிளகு சீரக இடியப்பம்
Prep Time
20 mins
Cook Time
20 mins
Total Time
40 mins
மிளகு சீரக இடியப்பம் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இடியாப்ப வகைகளுள் ஒன்று. அரிசியுடன் மிளகு ஜீரகம் மற்றும் தேங்காய் சேர்த்தால் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: இடியப்பம், மிளகு, மிளகு சீரக இடியப்பம்
Servings: 4
Ingredients
- 3/4 கப் அரிசி மாவு / இடியப்ப மாவு
- 2 மேஜைக்கரண்டி மிளகு
- 2 தேக்கரண்டி சீரகம்
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 1 மேஜைக்கரண்டி நெய்
- உப்பு - தேவையான அளவு
- 8 முந்திரிப் பருப்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 சிட்டிகை பெருங்காயம்
Instructions
- தண்ணீரில் சில சொட்டுகள் நல்லெண்ணெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அரிசி மாவில் சேர்த்து, மாவாக பிசைந்து கொள்ளவும்.
- இடியப்பம் செய்து ஆரியவுடன் உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
- மிளகு சீரகத்தை கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து, உடைத்த முந்திரிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- மிளகு சீரகத்தூள், கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- இதனை, வேகவைத்து உதிர்த்த இடியப்பம், துருவிய தேங்காய் , உப்பு (தேவைபட்டால்) சேர்த்து, கலந்து வைக்கவும்.
Recipe Notes
தேங்காயை வறுத்து சேர்த்தல் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.