மாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar 

மாங்காய் சாம்பார்

மாங்காய் சாம்பார் முருங்கைக்காய் சாம்பார் போலவே நல்ல வாசனையுடன் இருக்கும் சாம்பார். பொதுவாக மாங்காய் முருங்கைக்காய் இரண்டையும் சேர்த்து செய்வார்கள். அனால் மாங்காய் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.

சில மாங்காய் தோலுடன் எளிதில் வெந்துவிடும்,  சில வகை தோல் வேக  அதிக நேரம் பிடிக்கும். அதே போல, புளிப்பும் ஒவ்வொரு மாங்காய் வகைக்கு தகுந்தாற்போல மாறும். ஒட்டு மங்கை, கிளி மூக்கு மங்கை போன்ற வகை மாங்காய் கொண்டு சாம்பார் செய்யலாம். மாங்காயின் புளிப்பிற்கு தகுந்தாற்போல புளியின்  அளவை மாற்றிக்கொள்ளவும்.

காலிஃபிளவர் ரசம் செய்முறை

மாங்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்

மாங்காய்  – 1/2

துவரம் பருப்பு – 1/3 கப்

புளி – 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி  – 1 & 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் – 1

வெங்காயம் – 1

தக்காளி – 1/2

பெருங்காயம் – 1 சிட்டிகை

கருவேப்பிலை – சிறிது

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க 

எண்ணெய் – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் – 1

பெருங்காயம் – 1 சிட்டிகை

கடுகு – 3/4 தேக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை – 1 கொத்து

மாங்காய் சாம்பார் செய்முறை:

 1. பருப்பை, 1 மிளகாயோடு பெருங்காயம் 1 சிட்டிகை,  1 கப் தண்ணீர் சேர்த்து, 4 விசில் வரை மிதமான தீயில் வேக  வைக்கவும். வெந்ததும் நன்கு குழைத்து வைத்துக்கொள்ளவும்.mangai-sambar-1
 2. புளியை 1 கப் வெந்நீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கரைத்து வடிகட்டி, புளிக்கரைசல் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
 3. மாங்காயை படத்தில் காட்டியுள்ளது போல வெட்டி வைத்துக்கொள்ளவும். அதாவது, முதலில் மாங்காயை குறுக்கே அறியவும். பிறகு அதனை துண்டுகளாக நறுக்கவும். நல்ல கூர்மையான கத்தி/ அருவாமனை இருந்தால் தன் எளிதாக இருக்கும்.mangai-sambar-2
 4. கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும். mangai-sambar-3
 5. அறிந்த வெங்காயம்  சேர்த்து மிருதுவாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். mangai-sambar-4
 6. ஒரு அடி  கனமான பாத்திரத்தில், புளிக்கரைசல், 1 கப் தண்ணீர் சேர்த்து, வதக்கிய பொருட்கள், உப்பு, சாம்பார் போடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். mangai sambar 5அறிந்த மாங்காய் சேர்த்து வேக விடவும்.
 7. 3-5 நிமிடங்கள் கழித்து ஒரு மாங்காய் துண்டை எடுத்து அழுத்தி வெந்துவிட்டதா என பார்க்கவும்.mangai sambar 6
 8. வெந்த பின், பருப்பை சேர்த்து, தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். சில கருவேப்பிலை இலைகளை கிழித்து போட்டு, அடுப்பை விட்டு இறக்கவும். mangai sambar 7

குறிப்புகள்

 • மாங்காய்  கரையாமல் பார்த்துக்கொள்ளவும். 
சூடான சாதத்துடன் பரிமாறவும். தலை பாக மாங்காய் மிகவும் ருசியாக இருக்கும்.

மாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar
Prep Time
30 mins
Cook Time
15 mins
Total Time
45 mins
 
மாங்காய் சாம்பார் முருங்கைக்காய் சாம்பார் போலவே நல்ல வாசனையுடன் இருக்கும் சாம்பார். பொதுவாக மாங்காய் முருங்கைக்காய் இரண்டையும் சேர்த்து செய்வார்கள். அனால் மாங்காய் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.
Course: Lunch
Cuisine: Indian
Servings: 3
Author: rakskitchen tamil
Ingredients
 • மாங்காய் - 1/2
 • துவரம் பருப்பு - 1/3 கப்
 • புளி - 1 தேக்கரண்டி
 • சாம்பார் பொடி - 1 & 1/2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 • சிகப்பு மிளகாய் - 1
 • வெங்காயம் - 1
 • தக்காளி - 1/2
 • பெருங்காயம் - 1 சிட்டிகை
 • கருவேப்பிலை - சிறிது
 • உப்பு - தேவைக்கேற்ப
 • தாளிக்க
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
 • சிகப்பு மிளகாய் - 1
 • பெருங்காயம் - 1 சிட்டிகை
 • கடுகு - 3/4 தேக்கரண்டி
 • சீரகம் - 1/2 தேக்கரண்டி
 • கருவேப்பிலை - 1 கொத்து
Instructions
 1. பருப்பை, 1 மிளகையோடு பெருங்காயம் 1 சிட்டிகை, 1 கப் தண்ணீர் சேர்த்து, 4 விசில் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்ததும் நன்கு குழைத்து வைத்துக்கொள்ளவும்.
 2. புளியை 1 கப் வெந்நீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கரைத்து வடிகட்டி, புளிக்கரைசல் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
 3. மாங்காயை படத்தில் காட்டியுள்ளது போல வெட்டி வைத்துக்கொள்ளவும். அதாவது, முதலில் மாங்காயை குறுக்கே அறியவும். பிறகு அதனை துண்டுகளாக நறுக்கவும். நல்ல கூர்மையான கத்தி/ அருவாமனை இருந்தால் தன் எளிதாக இருக்கும்.
 4. கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
 5. அறிந்த வெங்காயம் சேர்த்து மிருதுவாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
 6. ஒரு அடி கனமான பாத்திரத்தில், புளிக்கரைசல், 1 கப் தண்ணீர் சேர்த்து, வதக்கிய பொருட்கள், உப்பு, சாம்பார் போடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். அறிந்த மாங்காய் சேர்த்து வேக விடவும்.
 7. -5 நிமிடங்கள் கழித்து ஒரு மாங்காய் துண்டை எடுத்து அழுத்தி வெந்துவிட்டதா என பார்க்கவும்.
 8. வெந்த பின், பருப்பை சேர்த்து, தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். சில கருவேப்பிலை இலைகளை கிழித்து போட்டு, அடுப்பை விட்டு இறக்கவும்.
Recipe Notes

மாங்காய் கரையாமல் பார்த்துக்கொள்ளவும்.

Author: Raks Anand

Leave a Reply

Your email address will not be published.

Recipe Rating