பைன் ஆப்பிள் கேசரி, அன்னாசிப்பழ கேசரி

pineapple-kesari-recipe

அன்னாசிப்பழ கேசரி (Pineapple kesari in tamil)

பைன் ஆப்பிள் கேசரி, அன்னாசிப்பழ கேசரி

என்ன தேவை?

ரவை – 1 கப்
அன்னாசி பழம், பொடியாக நறுக்கியது  – 1 & 1/2 கப்
சக்கரை – 2 கப்
நெய் – 1/4 கப் முதல் 1/2 கப் வரை
தண்ணீர் – 2 & 1/2 கப்
மஞ்சள் நிறம் – 2 துளிகள்  (தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கவும்)
உப்பு – ஒரு சிட்டிகை
முந்திரி – 8

எப்படி செய்வது?

  1. அன்னாசி பழத்தை, தோல் சீவி, கருப்பு புள்ளிகளை நீக்கி, நான்காக நெடுக்கே வெட்டவும். நடுவில் இருக்கும் அழுத்தமான தண்டை வெட்டி நீக்கவும். பொடியாக நறுக்கி, 3 மேஜைக்கரண்டி சக்கரை சேர்க்கவும். கலந்து, 30 நிமிடம் வைக்கவும்.அன்னாசிப்பழ கேசரி
  2. ஒரு வாணலியில் நெய் ஊற்றி, முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும். மேலே ரவையை சேர்த்து, மேலும் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, மிதமான தீயில் வறுக்கவும்.Step1 அன்னாசிப்பழ கேசரி
  3. இன்னொரு அடுப்பில், தண்ணீரை அளந்து, கொதிக்க விடவும். கொதித்தவுடன், வறுத்த ரவையில் மெதுவாக ஊற்றவும்.Step 2 அன்னாசிப்பழ கேசரி
  4. மிகவும் கவனமாக ஊற்ற வேண்டும், இல்லையேல் கையில் தெளிக்கவோ, ஆவி அடிக்கவோ வாய்ப்புள்ளது. உப்பு சேர்த்து, கூழ் போல ஆகும் வரை கிளறவும். கரண்டியால் சமன் செய்து, மிதமான தீயில் 4 நிமிடம் மூடி வேக வைக்கவும்.Step 4 அன்னாசிப்பழ கேசரி
  5. வெந்தவுடன், சக்கரை சேர்த்து, நன்கு மசித்தார் போல் கட்டியில்லாமல் கிளறவும்.Step 5 அன்னாசிப்பழ கேசரி
  6. மிக சிறிய கட்டிகள், கிளறும் பொழுது கரைந்துவிடும், கவலை பட வேண்டாம்.Step 6 அன்னாசிப்பழ கேசரி
  7. சக்கரை கரைந்து, இளகும் பொழுது, அன்னாசிப்பழ துண்டுகளை சேர்க்கவும் (தண்ணீரை வடித்து விடவும்). மஞ்சள் கேசரி கலர் சேர்த்து கலக்கவும்.Step 6 அன்னாசிப்பழ கேசரி
  8. கிளறும் பொழுது, அவ்வப்போது 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து, கிளறினால், 4-5 நிமிடங்களில் கெட்டியாக திரண்டுவரும்.Step 7 அன்னாசிப்பழ கேசரி
  9. அப்பொழுது, அடுப்பை நிறுத்தி, கேசரியின் மேலே ஒரு தேக்கரண்டி நெய் ஊற்ற.Step 8 அன்னாசிப்பழ கேசரி

சூடாகவோ, வெதுவெதுப்பாகவோ பரிமாறவும்.

Author: Raks Anand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *