தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் சுவையான சுண்டல் வகைகளுள் ஒன்று. மாங்காய்  சேர்ப்பதால்,  மிகவும்  ருசியாக  இருக்கும்.

பொதுவாக வெள்ளை பட்டாணி வைத்து தான் தேங்காய் மாங்காய்  சுண்டல் செய்வார்கள். நான் பச்சை பட்டாணி உபயோகித்துள்ளேன். சில நேரங்களில், வெள்ளை கொண்டக்கடை சுண்டலிலும் சேர்ப்பேன், நன்றாக இருக்கும்.

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

இதில் வெங்காயம் சேர்ப்பது அவரவர் விருப்பம். நவராத்திரிக்கு செய்யப்போகிறீர்கள் என்றால் வெங்காயத்தை தவிர்த்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பட்டாணி (பச்சை அல்லது வெள்ளை) – 1/2 கப்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

துருவிய மாங்காய்  – 1/2 கப்

துருவிய காரட் – 1/2 கப்

துருவிய தேங்காய் – 1/2 கப்

கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கியது – 1/4 கப்

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

உளுந்து – 1 தேக்கரண்டி

கருவேப்பிலை – 1 ஆர்க்கு

பெருங்காயம் – 2 சிட்டிகை

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை:

 1. பட்டாணியை முதல் நாள் இரவே போதிய அளவு தண்ணீரில்  ஊறவைக்கவும். மறுநாள், அத்தண்ணீரை வடித்துவிட்டு, போதுமான அளவு வேறு தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து, 4 விசில்கள் வேக விடவும்.thenga-manga-step1
 2. வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். மற்ற பொருட்களை தயாராக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, பெருங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும்.thenga-manga-step2
 3. வெங்காயம், பட்டாணி, மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.thenga-manga-step3
 4. இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின் சூடாகப் பரிமாறவும். thenga-manga-step4
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் செய்முறை
 
Prep time
Cook time
Total time
 
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் சுவையான சுண்டல் வகைகளுள் ஒன்று. மாங்காய் சேர்ப்பதால், மிகவும் ருசியாக இருக்கும்.
Author:
Recipe type: snack
Cuisine: Indian
Serves: 3
Ingredients
 • பட்டாணி (பச்சை அல்லது வெள்ளை) - ½ கப்
 • வெங்காயம் - 1
 • பச்சை மிளகாய் - 2
 • துருவிய மாங்காய் - ½ கப்
 • துருவிய காரட் - ½ கப்
 • துருவிய தேங்காய் - ½ கப்
 • கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கியது - ¼ கப்
 • உப்பு தேவைக்கேற்ப
 • எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
 • கடுகு - ½ தேக்கரண்டி
 • உளுந்து - 1 தேக்கரண்டி
 • கருவேப்பிலை - 1 ஆர்க்கு
 • பெருங்காயம் - 2 சிட்டிகை
Instructions
 1. பட்டாணியை முதல் நாள் இரவே போதிய அளவு தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள், அத்தண்ணீரை வடித்துவிட்டு, போதுமான அளவு வேறு தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து, 4 விசில்கள் வேக விடவும்.
 2. வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். மற்ற பொருட்களை தயாராக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, பெருங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும்.
 3. வெங்காயம், பட்டாணி, மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
 4. இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின் சூடாகப் பரிமாறவும்.
Notes
உப்பு சேர்த்து வேக வைத்தால் தான் பட்டாணி குழையாமல் வேகும்.

Raks Anand

leave a comment

Rate this recipe:  

Create AccountLog In Your Account