தேங்காய்ப் பால் பிரியாணி

தேங்காய்ப் பால் பிரியாணி தேங்காய்ப்  பால் பிரியாணி, எந்த ஒரு மசாலாவையும் அரைக்கும் வேலை இல்லாத செய்முறை இது. மிகவும் எளிது.

நான் சமைக்க கற்றுக்கொள்ள ஆரம்பித்த பொழுது, செய்யக்  கற்றுக்கொண்ட ஒன்று.

பாலக் பீஸ் புலாவ் செய்முறை

பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு ஒரு வரையறை உள்ளது. அரிசியைத் தனியாக வடித்து, , மசாலா + காய்  குழம்பு போல செய்து, வடித்த சாதம் மற்றும் இந்த மசாலாவை லேயராக தம் வைத்து செய்வதை, பிரியாணி என்று கூறுவார். ஆனால் மசாலா குறைவாக, காரம் கம்மியாக சேர்த்து, சாதாரணமாக செய்தால் புலாவ் என்றும், நன்கு காரசாரமாக, மசாலாக்கள் தூக்கலாக சேர்த்து செய்வதை பிரியாணி என்றும் கூறி பழக்கமாகி விட்டது எனக்கு.தேவையான பொருட்கள்தேவையான பொருட்கள்தேவையான பொருட்கள்

இதனை நீங்கள் தேங்காய்ப்பால் சேர்த்த புலாவ் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். புதினா மஞ்சள், மிளகாய், கரம் மசாலா சேர்த்து செய்வதால், பிரியாணி போலவே இருக்கும் என்பதால் பிரியாணி என்று பெயரிட்டுள்ளேன்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்

தேங்காய் பால்  – 1 கப்

காய்கறிகள்  (கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி) – 1 கப்

வெங்காயம் – 2 நடுத்தர அளவு

பச்சை மிளகாய் – 2

புதினா & கொத்தமல்லி இலை – 2 மேஜைக்கரண்டி

சிவப்பு மிளகாய் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா பவுடர் – 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

தண்ணீர் – 1 கப்

ஏலக்காய் – 2

இலவங்கப்பட்டை – சிறிய துண்டு

கிராம்பு – 2

பிரியாணி இலை – 1

எண்ணெய் / நெய் – 1 மேஜைக்கரண்டி

உப்பு – சுவைக்கு

தேங்காய்ப்  பால் பிரியாணி செய்முறை

 1. 10 முதல் 15 நிமிடங்கள் வரைபாசுமதி அரிசியை ஊறவைத்து, பிறகு, தண்ணீரை ஓட்ட வடித்துவிட்டு,  1/4 தேக்கரண்டி நெய் சேர்த்து ஒரு கடாயில் வறுக்கவும்.
 2. ஒரு அடி  கனமான பாத்திரத்திலோ , குக்கரிலோ, நெய்/ எண்ணெய் சேர்க்கவும். ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை வரிசையாக சேர்க்கவும்.
 3. வெங்காயம் வதங்கியதும், வெட்டிய காய்கறிகள் சேர்த்து, அதற்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி இலை, புதினா  மற்றும் பொடிகள் (சிவப்பு மிளகாய், கரம் மசாலா, மஞ்சள்)  சேர்த்து, ஒரு கிளறு கிளறவும். 
 4. தண்ணீர், தேங்காய் பால், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். நான் தேங்காய் பால் பவுடர் பயன்படுத்தினேன், நீங்கள் கூட கடைகளில் தயாரிக்கப்படும் தேங்காய்ப்  பால் பயன்படுத்தலாம்.
 5. பாஸ்மதி அரிசி சேர்த்து, கொதிக்கும் பொழுது, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, 12- 14 நிமிடங்கள் வரை, குறைந்த தீயில் வேக வைக்கவும். மிதமான தீயில் 2 விசில்களும் வைக்கலாம்.

வெங்காய தயிர் பச்சடியுடன் சூடாகப்  பரிமாறவும்.

 

தேங்காய்ப் பால் பிரியாணி, thengai paal biryani
Author: 
Recipe type: Main
Cuisine: Indian
Prep time: 
Cook time: 
Total time: 
Serves: 3
 
தேங்காய்ப் பால் பிரியாணி, எந்த ஒரு மசாலாவையும் அரைக்கும் வேலை இல்லாத செய்முறை இது. மிகவும் எளிது.
Ingredients
 • பாஸ்மதி அரிசி - 1 கப்
 • தேங்காய் பால் - 1 கப்
 • காய்கறிகள் (கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி) - 1 கப்
 • வெங்காயம் - 2 நடுத்தர அளவு
 • பச்சை மிளகாய் - 2
 • புதினா & கொத்தமல்லி இலை - 2 மேஜைக்கரண்டி
 • சிவப்பு மிளகாய் - ½ தேக்கரண்டி
 • கரம் மசாலா பவுடர் - ½ தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
 • தண்ணீர் - 1 கப்
 • ஏலக்காய் - 2
 • இலவங்கப்பட்டை - சிறிய துண்டு
 • கிராம்பு - 2
 • பிரியாணி இலை - 2
 • எண்ணெய் / நெய் - 2 மேஜைக்கரண்டி
 • உப்பு - சுவைக்கு
Instructions
 1. முதல் 15 நிமிடங்கள் வரைபாசுமதி அரிசியை ஊறவைத்து, பிறகு, தண்ணீரை ஓட்ட வடித்துவிட்டு, ¼ தேக்கரண்டி நெய் சேர்த்து ஒரு கடாயில் வறுக்கவும்.
 2. ஒரு அடி கனமான பாத்திட்டத்திலோ, குக்கரிலோ, நெய்/ எண்ணெய் சேர்க்கவும்.
 3. ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை வரிசையாக சேர்க்கவும்.
 4. வெங்காயம் வதங்கியதும், வெட்டிய காய்கறிகள் சேர்த்து, அதற்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
 5. கொத்தமல்லி இலை, புதினா மற்றும் பொடிகள் (சிவப்பு மிளகாய், கரம் மசாலா, மஞ்சள்) ஆகியவற்றைத் சேர்த்து, ஒரு கிளறு கிளறவும்.
 6. தண்ணீர், தேங்காய் பால், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
 7. நான் தேங்காய் பால் பவுடர் பயன்படுத்தினேன், நீங்கள் கூட கடைகளில் தயாரிக்கப்படும் தேங்காய்ப் பால் பயன்படுத்தலாம்.
 8. பாஸ்மதி அரிசி சேர்த்து, கொதிக்கும் பொழுது, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, 12- 14 நிமிடங்கள் வரை, குறைந்த தீயில் வேக வைக்கவும். மிதமான தீயில் 2 விசில்களும் வைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rate this recipe: