தக்காளி சட்னி செய்முறை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, தனியா சேர்த்து செய்யும் காரசாரமான சட்னி. இது, இட்லி, தோசை மற்றும் ஊத்தப்பம் போன்ற சிற்றுண்டிகளுக்கு ஏற்றது.
வெங்காயம் தக்காளி சேர்த்து பல வகைகளில் சட்னி தயாரிக்கலாம். இதைப்போல என் மாமி அடிக்கடி செய்வதுண்டு, நான் இம்முறையில் செய்வது இதுவே முதல் முறை.
இஞ்சி, தனியா சேர்ப்பதால் மானமுள்ள சட்னியாக உள்ளது.

தக்காளி சட்னி தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1
தக்காளி – 1
புளி – 1/2 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 6
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
தனியா – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
தக்காளி சட்னி செய்முறை:
- கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, மிளகாய், கடலை பருப்பு சேர்த்து 30 நொடிகள் வறுக்கவும். தனியா சேர்த்து மேலும் 30 நொடிகள் வறுக்கவும்.
- பொன்னிறமானவுடன், நறுக்கிய இஞ்சி மற்றும் வெட்டிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
- தக்காளி ம்ருதுவானவுடன், ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
- ஆரிய பின், புளி, உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- கடையில் 1 தேக்கரண்டி எண்ணெயில், கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு சேர்த்து, கடைசியாக கருவேப்பிலை சேர்த்து, இதனை சட்னியுடன் கலக்கவும்.
சூடான இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.சட்னி வகைகள்

தக்காளி சட்னி செய்முறை, thakkali chutney in tamil
Prep Time
10 mins
Cook Time
10 mins
Total Time
20 mins
தக்காளி சட்னி செய்முறை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, தனியா சேர்த்து செய்யும் காரசாரமான சட்னி. இது, இட்லி, தோசை மற்றும் ஊத்தப்பம் போன்ற சிற்றுண்டிகளுக்கு ஏற்றது.
Course: Breakfast
Cuisine: Indian
Servings: 4
Ingredients
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- புளி - 1/2 தேக்கரண்டி
- சிகப்பு மிளகாய் - 6
- கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
- தனியா - 1 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை - 1 ஆர்க்கு
Instructions