தக்காளி குருமா இட்லி, தோசை, பூரிக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற ஒரு சைட் டிஷ். மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒன்று. 15 நிமிடங்களில் ரெடி ஆகிவிடும்.
இதை ராஜி என்ற தோழியிடம் கற்றுக்கொண்டேன். அவர் வீட்டில் சாப்பிட்ட பொழுது இதனை கேட்டு கற்றுக்கொண்டேன். எனக்குப் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. இதில் மசாலா சேர்த்து செய்திருக்கிறேன், இதே போல எங்கள் வீட்டில், மசாலா எதுவும் சேர்க்காமல் செய்வது வழக்கம். அதுவும் நன்றாக இருக்கும்.
குருமா செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2
தக்காளி – 2
சாம்பார் பொடி – 3/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
அரைக்கவும்
தேங்காய் துருவல் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 5
சோம்பு – 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை – 1 மேஜைக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
பட்டை – 1 சிறிய துண்டு
கிராம்பு – 2
செய்முறை:
- தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சூடாக்கி, பட்டை கிராம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி குழைந்தவுடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி, 1 & 1/2 தண்ணீர் சேர்த்து, உப்பு சரி பார்த்து 3-4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
சப்பாத்தி, பூரி, இட்லி தோசை எதனுடன் வேண்டும் என்றாலும் பரிமாறலாம்.

தக்காளி குருமா செய்முறை, thakkali kurma
Prep Time
10 mins
Cook Time
10 mins
Total Time
20 mins
தக்காளி குருமா இட்லி, தோசை, பூரிக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற ஒரு சைட் டிஷ். மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒன்று. 15 நிமிடங்களில் ரெடி ஆகிவிடும்.
Course: Breakfast
Cuisine: Indian
Servings: 3
Ingredients
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- சாம்பார் பொடி - 3/4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 5
- சோம்பு - 1/2 தேக்கரண்டி
- பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- பட்டை - 1 சிறிய துண்டு
- கிராம்பு - 2
Instructions
- தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சூடாக்கி, பட்டை கிராம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- தக்காளி குழைந்தவுடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி, 1 & 1/2 தண்ணீர் சேர்த்து, உப்பு சரி பார்த்து 3-4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.