
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ?
கோதுமை ரவா பாயசம் முதல் முறை வெல்லம் சேர்த்து செய்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு, முஸ்தபாவில் சம்பா கோதுமை ரவையை காண்பித்து, Vj என்னிடம், அதில் பாயசம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். எதுவுமே விரும்பி சமைக்க சொல்லாத ஒருவர் அப்படி சொன்னவுடன் வாங்காமல் வருவேனா? வாங்கி, சிலமுறை சக்கரை சேர்த்து பாயசம் செய்து காலி செய்தேன். பாயசம் என்று சொல்வதை விட காஞ்சி என்று சொல்லாம். ஏனென்றால் அவருக்கு இலக்கையோ, முந்திரிப்பருப்போ சேர்த்தால் பிடிக்காது.
இந்தவாரம் வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு பிறப்பதால், ஏதேனும் பாயசம் போஸ்ட் செய்யவேண்டும் என்று நினைத்தேன். அதனால் கோதுமை ரவா பாயசம் செய்யலாம் என்று நினைத்தேன்.

- கோதுமை ரவா - 1/4 கப்
- வெல்லம் - 1/2 கப்
- பால் - 1 கப்
- உப்பு - 1 சிட்டிகை
- நெய் - 1 தேக்கரண்டி
- முந்திரிப்பருப்பு - 6
- ஏலக்காய் - 1
- முதலில் ஒரு சிறிய குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அதே குக்கரில் கோதுமை ரவையை சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும்.
- கப் - 1& 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3-4 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.
- மிருதுவாக வெந்தவுடன், வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கரைக்கவும். வெந்த கோதுமை ரவையுடன் வடிகட்டி சேர்த்து கலக்கவும். 1/2 கப் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.
- குறைந்த தீயில் 5 நிமிடம் பாகு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
- பாலை, மெதுவாக சேர்த்து கலக்கவும். ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் சூடு செய்யவும். அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஆரிய பிறகு கெட்டியாகும் அதனால் அதற்கு தகுந்தவாறு அடுப்பை நிறுத்தவும்.
தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.
பாயசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், சிறிது காய்ச்சிய பால் சேர்த்து சரி செய்து கொள்ளவும்.
கோதுமை ரவா பாயசம் செய்ய தேவையான பொருட்கள்
கோதுமை ரவா – 1/4 கப்
வெல்லம் – 1/2 கப்
பால் – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
நெய் – 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 6
ஏலக்காய் – 1
கோதுமை ரவா பாயசம் செய்முறை
- முதலில் ஒரு சிறிய குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அதே குக்கரில் கோதுமை ரவையை சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும்.
- 1 கப் – 1& 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3-4 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.
- மிருதுவாக வெந்தவுடன், வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கரைக்கவும்.
- வெந்த கோதுமை ரவையுடன் வடிகட்டி சேர்த்து கலக்கவும். 1/2 கப் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.
- குறைந்த தீயில் 5 நிமிடம் பாகு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
- பாலை, மெதுவாக சேர்த்து கலக்கவும்.
- ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் சூடு செய்யவும். அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஆரிய பிறகு கெட்டியாகும் அதனால் அதற்கு தகுந்தவாறு அடுப்பை நிறுத்தவும்.
குறிப்பு
- தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.
- பாயசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், சிறிது காய்ச்சிய பால் சேர்த்து சரி செய்து கொள்ளவும்.
சூடாக பரிமாறவும்.
Looking yummy 🤩. Will try it at home. Thanks for the healthy recipe