கருப்பு உளுந்து சுண்டல்

கருப்பு உளுந்து சுண்டல் செய்வது மிகவும் சுலபம். உடலுக்கு மிகவும் நல்லது, சத்தானது!

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – 1/2 கப்

துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 3/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 3

பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

1. கருப்பு உளுந்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறு நாள், தண்ணீரை மாற்றி, உப்பு, பெருங்காயம், போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும்.

1-soak

2. தண்ணீரை வடித்து, கடையில் தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்தபின், வெந்த உளுந்தை சேர்க்கவும்.

2-temper

3. 2 நிமிடங்கள் வதக்கிய பின், துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.

3-ready

குறிப்பு

** கருப்பு உளுந்து, ஊறிய பின், இருமடங்காகும். அதனால் தேவைக்கேற்ப ஊற வைக்கவும்.

Author: Raks Anand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *