உளுந்து களி செய்முறை, உளுத்தங்களி

உளுந்து களி செய்முறை, உளுத்தங்களி

உளுந்து களி செய்முறை, உளுத்தங்களி

உளுந்து களி அல்லது உளுந்தங்களி,  உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று. உளுந்தங்களி எப்படி செய்வது என்று இந்த போஸ்டில் பார்ப்போம்.

உளுந்து களி

உளுந்து களி நல்லெண்ணெய் சேர்த்து தயாரிப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. சிலர், நெய் சேர்த்தும் செய்வார்கள். மாதவிடாய் நாட்களில் ஏற்படும் கால் வலி, இடுப்பு வலி, உளுந்து களி சேர்த்துக்கொள்வதன் மூலம் குறையும்.  வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து செய்யலாம். கருப்பட்டி சேர்த்து செய்தால் சற்று தித்திப்பு குறைவாக இருக்கும். 

திணை பணியாரம், Thinai paniyaram, Millet recipes in tamil

தேவையான பொருட்கள்:

உளுந்து – 1/2 கப் 

அரிசி – 1 மேஜைக்கரண்டி 

வெல்லம் அல்லது கருப்பட்டி, பொடித்து – 1/2 கப் + 1 மேஜைக்கரண்டி 

நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி 

உளுந்து களி  செய்முறை: 

 1. உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
 2. ஆறியபின் மிக்சியில் நைசான மாவாக அரைக்கவும்.
 3. ஒரு அடி கனமான பாத்திரத்தில், வெள்ளம்/ கருப்பட்டி சேர்த்து, அரை கப் + 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 
 4. அரைத்த மாவை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஒரு விஸ்க்  கொண்டு உடனே கட்டி இல்லாமல் கலக்கவும்.
 5. மேலும் 1/4 கப்+ 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக்கவும்.
 6. கை விடாமல் கலந்துகொண்டு இருப்பது அவசியம். இல்லையென்றால் அடி பிடிக்கும்.
 7. கிண்டும் பொழுது, ஒரு சமயத்தில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும். 
 8. களி வெந்து, ஓரத்தில் ஒட்டாமல் வந்தவுடன், கையை தண்ணீரில் நினைத்து, களியை தொட்டுப்பார்த்தால் ஒட்டக்கூடாது. இப்பொழுது அடுப்பை அணைக்கவும்.
குறிப்புகள்:
 • உளுந்தும், அரிசியும் வருக்கும் பொழுது, மிதமான தீயில் வறுத்தால் தான், கருகாமல், உள்  வரை வறுபடும் .
 • எண்ணெய், ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை சேர்த்துக்கொள்ளவும்.
உருண்டைகளாக உருட்டியோ அல்லது அப்படியேவும் கிண்ணத்தில் வைத்து சாப்பிடலாம். 
 
உளுந்து களி செய்முறை, உளுந்தங்களி
 
Prep time
Cook time
Total time
 
உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று. உளுந்தங்களி எப்படி செய்வது என்று இந்த போஸ்டில் பார்ப்போம்.
Author:
Recipe type: Snack
Cuisine: Indian
Serves: 4
Ingredients
 • உளுந்து - ½ கப்
 • அரிசி - 1 மேஜைக்கரண்டி
 • வெல்லம் அல்லது கருப்பட்டி, பொடித்து - ½ கப் + 1 மேஜைக்கரண்டி
 • நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
Instructions
 1. உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
 2. ஆறியபின் மிக்சியில் நைசாக மாவாக அரைக்கவும்.
 3. ஒரு அடி கனமான பாத்திரத்தில், வெள்ளம்/ கருப்பட்டி சேர்த்து, அரை கப் + 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 4. அரைத்த மாவை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஒரு விஸ்க் கொண்டு உடனே கட்டி இல்லாமல் கலக்கவும்.
 5. மேலும் ¼ கப்+ 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக்கவும்.
 6. கை விடாமல் கலந்துகொண்டு இருப்பது அவசியம். இல்லையென்றால் அடி பிடிக்கும்.
 7. கிண்டும் பொழுது, ஒரு சமயத்தில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
 8. களி வெந்து, ஓரத்தில் ஒட்டாமல் வந்தவுடன், கையை தண்ணீரில் நினைத்து, களியை தொட்டுப்பார்த்தால் ஒட்டக்கூடாது. இப்பொழுது அடுப்பை அணைக்கவும்.
Notes
உளுந்தும், அரிசியும் வருக்கும் பொழுது, மிதமான தீயில் வறுத்தால் தான், கருகாமல், உள் வரை வறுபடும் .
எண்ணெய், ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை சேர்த்துக்கொள்ளவும்.

Raks Anand

leave a comment

Rate this recipe:  

Create AccountLog In Your Account